'கலைத்தாயின் இளையமகன் ஐயா நீர்': வீர தீர சூரன் படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த எஸ்.ஜே.சூர்யா!
'வீர தீர சூரன்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடந்த ஆச்சரியமூட்டும் இரவு நேர படப்பிடிப்பு அனுபவத்தை நடிகர் எஸ்.ஜே.சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார். மதுரையில் படமாக்கப்பட்ட கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியை இயக்குநர் அருண்குமார் படமாக்கிய விதம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீயான் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா மற்றும் சுராஜ் வெஞ்சாரமூடு ஆகியோர் மோதும் இந்த முக்கிய காட்சிக்காக, இயக்குநர் அருண்குமார் தனது உதவி இயக்குநர்களுடன் அதே களத்தில் பத்து நாட்கள் ஒத்திகை பார்த்துள்ளார். பின்னர் நடிகர்களுடன் மூன்று இரவுகள் ஒத்திகை பார்த்து, அதிகாலை ஐந்து மணிக்கு அந்தக் காட்சியை எடுத்து முடித்துள்ளனர். இயக்குநரின் அசாத்திய உழைப்பைப் பாராட்டிய எஸ்.ஜே.சூர்யா, 'கலைத்தாயின் இளையமகன் ஐயா நீர்' என்று நெகிழ்ந்து பாராட்டியுள்ளார். இந்த கடின உழைப்பு திரையில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.
· Riyashibu_