'வீர தீர சூரன்' சூப்பர் ஹிட் வெற்றி: அனைத்து மாநிலங்களிலும் திரைகள் அதிகரிப்பு!
சியான் விக்ரம் நடிப்பில் வெளியான 'வீர தீர சூரன்' திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, அனைத்து மாநிலங்களிலும் இப்படத்திற்கான திரைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் ரியா ஷிபு இந்த மகிழ்ச்சிகரமான தகவலைப் பகிர்ந்துள்ளார். தமிழக விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுக்கும் தயாரிப்பு நிறுவனம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளது. இயக்குநர் எஸ்.யு. அருண்குமாரின் நேர்த்தியான இயக்கம் மற்றும் விக்ரமின் யதார்த்தமான நடிப்பு குடும்ப ரசிகர்களைத் திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது. ரசிகர்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நிரம்பி வருவதால், திரையரங்கு உரிமையாளர்களும் விநியோகஸ்தர்களும் பெரும் உற்சாகத்தில் உள்ளனர்.
· Riyashibu_