சீயான் விக்ரமின் ‘வீர தீர சூரன்’: தமிழக திரையரங்கு உரிமையைக் கைப்பற்றிய ஃபைவ் ஸ்டார் செந்தில்!
சீயான் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'வீர தீர சூரன்' திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை பிரபல விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் கைப்பற்றியுள்ளதாக நட்சத்திரம் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் எஸ்.யு. அருண்குமார் இயக்கியுள்ளார். காளி என்ற அதிரடியான கதாபாத்திரத்தில் சீயான் விக்ரம் நடிக்க, அவருடன் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு, துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சித்தா படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு அருண்குமார் இயக்கும் படம் என்பதால் வியாபார வட்டாரத்தில் இதற்கு பலத்த போட்டி நிலவியது. ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்ற முன்னணி விநியோகஸ்தர் இப்படத்தின் தமிழக உரிமையைப் பெற்றுள்ளதால், மாநிலம் முழுவதும் மிக அதிகமான திரைகளில் பிரம்மாண்டமாக இப்படம் வெளியாகத் தயாராகி வருகிறது.
· Shibuthameens