வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படப்பிடிப்பு தள நினைவுகள்: கயல் தேவராஜ் த்ரோபேக்

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படப்பிடிப்பு தள நினைவுகள்: கயல் தேவராஜ் த்ரோபேக்

தமிழ் சினிமாவில் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாத திரைப்படமாக அமைந்த படம் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன். இயக்குநர் எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால், சூரி, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்த இப்படத்தின் படப்பிடிப்பு தள நினைவுகளை நடிகர் கயல் தேவராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் மலரும் நினைவுகளாக பகிர்ந்துள்ளார். 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று சென்னை ஏ.ஆர்.எஸ் கார்டனில் நடைபெற்ற படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை அவர் வெளியிட்டுள்ளார். இதில் கிருஷ்ணமூர்த்தி, சூப்பர்குட் லட்சுமணன் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்களுடன் நின்ற தருணங்களை அவர் பதிவு செய்துள்ளார். சூரியின் புஷ்பா புருஷன் காமெடி உள்ளிட்ட பல மறக்க முடியாத நகைச்சுவை காட்சிகளைக் கொண்ட இப்படம் வெளியான காலத்தில் திரையரங்குகளில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த பழைய புகைப்படங்கள் கோலிவுட் ரசிகர்களுக்கு நல்லதொரு சினிமா நினைவூட்டலாக அமைந்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்