அடுத்தடுத்து களமிறங்கும் வேல்ஸ் படங்கள்: ஐசரி கணேஷ் அறிவிப்பு

அடுத்தடுத்து களமிறங்கும் வேல்ஸ் படங்கள்: ஐசரி கணேஷ் அறிவிப்பு

வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் தனது தயாரிப்பு நிறுவனத்தின் அடுத்தடுத்த படங்களின் அதிரடி வெளியீட்டு பட்டியலை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார். எக்ஸ் தளத்தில் மூவி தமிழ் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோவில் அவர் இந்த வெளியீட்டு திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளார். தீபாவளி பண்டிகைக்கு நயன்தாரா, சுந்தர் சி கூட்டணியில் உருவான மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் நவம்பர் மாதத்தில் பிரம்மாண்டமாக திரைக்கு வருகிறது. அதனைத் தொடர்ந்து டிசம்பரில் தயங்காரம் திரைப்படமும், ஜனவரியில் 96 பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் பகத் பாசில் நடிக்கும் புதிய படமும் அடுத்தடுத்து திரைக்கு வரவுள்ளன. மேலும் பாலிவுட் பிரபல இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கும் அன்கில் திரைப்படமும் வேல்ஸ் வரிசையில் தயாராகி வருகிறது. ஒரே தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து மாதந்தோறும் முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் திரையரங்குகளில் வரிசை கட்டி நிற்பது கோலிவுட் வட்டாரத்தில் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நவம்பர் முதல் அடுத்த ஆண்டு தொடக்கம் வரை வேல்ஸ் நிறுவனத்தின் படங்கள் ரசிகர்களுக்கு திரையரங்கு விருந்தாக அமையவுள்ளன.

· @_movietamil

பழைய செய்திகள்