எஸ்.எஸ் ஸ்கிரீன்ஸ் தயாரிப்பில் 'ஒட்டாரம்': ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் வெற்றிமாறன்!
எஸ்.எஸ் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு எண் 1 திரைப்படத்திற்கு 'ஒட்டாரம்' என்று பெயரிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார் என்று பிஆர்ஓ சதீஷ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இத்திரைப்படத்தை இயக்குநர் ராமமூர்த்தி இயக்கியுள்ளார். இப்படத்தில் பரணி, டிஎஸ்கே, சாமுவேல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சி.சத்யா இசையமைக்க, விவேக் மற்றும் மோகன் பாடல்களை எழுதியுள்ளனர். ஷெரீப் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். கிராமத்து வாழ்வியல் மற்றும் எதார்த்தமான மனிதர்களின் கதையைப் பேசும் விதமாக போஸ்டரின் வடிவமைப்பு அமைந்துள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் வாழ்த்துகளோடு வெளியாகியுள்ள 'ஒட்டாரம்' ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. படத்தின் டீசர் மற்றும் திரையரங்கு வெளியீடு தொடர்பான அடுத்த கட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Prosathish