இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடும் எஸ்.எஸ். ஸ்கிரீன்ஸ் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

இயக்குநர் வெற்றிமாறன் வெளியிடும் எஸ்.எஸ். ஸ்கிரீன்ஸ் முதல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்!

தமிழ் திரையுலகில் புதிய தயாரிப்பு நிறுவனமான எஸ்.எஸ். ஸ்கிரீன்ஸ் தயாரிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை வெளியாகவுள்ளது. இந்த ஃபர்ஸ்ட் லுக்கை முன்னணி இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடன இயக்குநர் ஷெரிப் ஆகியோர் வெளியிட இருப்பதாக நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். நாளை மாலை சரியாக 6.06 மணிக்கு இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைதளங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது. திறமையான இளம் கலைஞர்கள் இணையும் இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்கிறார். மேலும் விவேக் மற்றும் மோகன் பாடல்களை எழுதியுள்ளனர். புதிய களத்தில் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. வெற்றிமாறன் போன்ற முன்னணி படைப்பாளியின் கைகளால் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்படுவது படக்குழுவினருக்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளதுடன், சினிமா ரசிகர்கள் மத்தியிலும் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்