அருள்நிதி, அமீர் இணையும் 'வேட்டசாமி': முதல் சிங்கிள் 'சாமி அழைப்பு' நாளை ரிலீஸ்

அருள்நிதி, அமீர் இணையும் 'வேட்டசாமி': முதல் சிங்கிள் 'சாமி அழைப்பு' நாளை ரிலீஸ்

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அருள்நிதி மற்றும் முன்னணி இயக்குனர் அமீர் முதன்முறையாக இணைந்து நடிக்கும் 'வேட்டசாமி' திரைப்படத்தின் முதல் பாடல் 'சாமி அழைப்பு' அக்டோபர் 30 மாலை 5 மணிக்கு வெளியாகிறது. "சட்டத்திலிருந்து தப்பு, சாமியை எதிர்கொள்" என்ற அதிரடி வாசகத்துடன் இப்பாடலின் போஸ்டர் வெளியாகியுள்ளது. எம்.எஸ். குமார் இயக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 7எம்பிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் ஜிஎம் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஆண்டனி ரூபன் படத்தொகுப்பு பணிகளையும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளனர். ஆக்‌ஷன் மற்றும் கிராமத்துப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் அருள்நிதி மற்றும் அமீரின் மோதல் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஜிப்ரானின் இசை இப்பாடலை மேலும் விறுவிறுப்பாக மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்