வேட்டசாமி படத்தின் சாமி அழைப்பு பாடல் சாதனை: 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து யூடியூபில் டிரெண்டிங்!
அருள்நிதி மற்றும் இயக்குநர் அமீர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் 'வேட்டசாமி'. எம்.எஸ்.குமார் இயக்கும் இந்த படத்தின் முதல் தனிப்பாடலான 'சாமி அழைப்பு' அண்மையில் வெளியானது. ஆன்மிகமும் அதிரடியும் கலந்த இந்த பாடல் யூடியூப் தளத்தில் 2 மில்லியன் பார்வைகளைக் கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாகப் படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ரூபன் படத்தொகுப்பு பணிகளையும், ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவையும் கவனிக்கின்றனர். 7 எம்பிஎஸ் புரொடக்ஷன்ஸ் மற்றும் ஜிஎம் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படம் கிராமத்து பின்னணியில் அதிரடி திரில்லராக உருவாகி வருகிறது. "சட்டத்திலிருந்து தப்பு, கடவுளை எதிர்கொள்" என்ற வாசகத்துடன் வெளியாகியுள்ள இந்த பாடல் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது. அருள்நிதியின் வித்தியாசமான கதைத் தேர்வும், அமீரின் அழுத்தமான நடிப்பும் இணையும் வேட்டசாமி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் தேதியை ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
· Actor Kayal Devaraj