குடும்பத்துக்காக எதையும் செய்யும் 'காந்தா': 'ஜெயிலர் 2' கதாபாத்திரம் குறித்து வித்யா பாலன் ஓபன் டாக்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'ஜெயிலர் 2' படத்தில் தான் ஏற்று நடித்துள்ள 'காந்தா' என்ற அதிரடி கதாபாத்திரம் குறித்து பாலிவுட் நாயகி வித்யா பாலன் மனம் திறந்து பேசியுள்ளார். தனது குடும்பத்தை எல்லாவற்றையும் விட மேலாகக் கருதும் அஞ்சாநெஞ்சம் கொண்ட துணிச்சலான பெண்மணியாக காந்தா கதாபாத்திரம் நெல்சனால் வடிவமைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தின் தேவைகளுக்காகவும் அவர்களின் பாதுகாப்புக்காகவும் எதையும் செய்யத் துணியும் காந்தா, தன் வழியில் யார் குறுக்கே நின்றாலும் துளியும் அஞ்சமாட்டார் என்று வித்யா பாலன் விவரித்துள்ளார். கதாபாத்திரத்தின் ஆக்ரோஷமும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களும் ரசிகர்களை வெகுவாகக் கவரும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்திய சினிமாவில் அழுத்தமான கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த வித்யா பாலன், நெல்சனின் ஸ்டைலிஷ் இயக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட ஆக்ரோஷமான கதாபாத்திரத்தில் தோன்றுவது இப்படத்தின் மீதான திரை ஆர்வத்தை மேலும் கூட்டியுள்ளது.

· @_movietamil

பழைய செய்திகள்