சிகரெட் பிடிக்கும் காட்சியில் நடுங்கிய விரல்கள்: 'ஜெயிலர் 2' படப்பிடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்த வித்யா பாலன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'ஜெயிலர் 2' படப்பிடிப்பின் போது நடந்த ஒரு சுவாரசியமான மற்றும் நகைச்சுவையான சம்பவத்தை நடிகை வித்யா பாலன் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் பகிர்ந்துள்ளனர். தனக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கம் இல்லாததால், படப்பிடிப்பின் முதல் நாளில் சிகரெட் பிடித்த போது தலைசுற்றல் ஏற்பட்டு விரல்கள் நடுங்கியதாக வித்யா பாலன் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். அப்போது மானிட்டரில் அவரது கண்களின் தீவிரமான நடிப்பைப் பார்த்து வியந்த இயக்குனர் நெல்சன், விரல்கள் நடுங்குவதைக் கண்டு என்ன ஆச்சு எனக் கேட்டுள்ளார். அப்போது அருகில் இருந்த எஸ்.ஜே.சூர்யா, "பில்டிங் ஸ்ட்ராங் ஆனால் விரல்கள் வீக்" என்று நகைச்சுவையாகக் கலாய்த்தது படப்பிடிப்பு தளத்தில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது. கண்களிலேயே புகை வந்ததாக நெல்சனும் நகைச்சுவையாகக் கூறியுள்ளார். வித்யா பாலனின் தீவிரமான கதாபாத்திர வடிவமைப்பும் நெல்சனின் டார்க் காமெடி மேக்கிங்கும் இணைந்து இப்படத்தில் ரசிகர்களுக்கு புதிய பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

· @_movietamil

பழைய செய்திகள்