விஜய் ஆண்டனியின் அப்பாக்குட்டி ஆடியோ உரிமம் விற்பனை: தீபாவளிக்கு திரைக்கு வருகிறது!

விஜய் ஆண்டனியின் அப்பாக்குட்டி ஆடியோ உரிமம் விற்பனை: தீபாவளிக்கு திரைக்கு வருகிறது!

இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் அப்பாக்குட்டி திரைப்படத்தின் ஆடியோ உரிமத்தை விஜய் ஆண்டனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு வெளியாக உள்ள படங்களின் வரிசையில் இப்படமும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிரீத்தி நடித்துள்ளார். மேலும் ஹரிபிரியா, பக்ஸ், அருவி மதன், முத்துக்குமார் மற்றும் லிசி ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்துள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். குடும்ப உணர்வுகள் மற்றும் சுவாரசியமான திரைக்கதையுடன் தயாராகியுள்ள அப்பாக்குட்டி திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்