விஜய் ஆண்டனி இசையில் 'அப்பாக்குட்டி நானாக்குட்டி': முதல் பாடல் நாளை ரிலீஸ்!
இயக்குநர் மு. மாறன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'அப்பாக்குட்டி நானாக்குட்டி' படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது. விஜய் ஆண்டனி இசையமைக்கும் இப்படத்தின் பாடலை விஜய் ஆண்டனி மியூசிக் தளம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளது. தந்தை மற்றும் மகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை அழகாக விவரிக்கும் பாடலாக இது உருவாகியுள்ளது. 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் மு. மாறனுடன் விஜய் ஆண்டனி மீண்டும் கூட்டணி அமைத்துள்ளதால், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. குடும்ப உறவுகளின் உன்னதத்தை உணர்த்தும் இந்தப் பாடல் நாளை வெளியாகி ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் எனப் படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
· @tamilcinexpress