விஜய் ஆண்டனியின் 'அப்பாக்குட்டி' தமிழக உரிமத்தைக் கைப்பற்றிய 5 ஸ்டார் செந்தில்: தீபாவளி ரிலீஸ்!
நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குநர் மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான 'அப்பாக்குட்டி' படத்தின் தமிழக திரையரங்கு விநியோக உரிமத்தை முன்னணி விநியோகஸ்தரான 5 ஸ்டார் செந்தில் அதிகாரப்பூர்வமாகக் கைப்பற்றியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் அறிவித்துள்ளன. மு. மாறன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிப்பதோடு அவரே தனது வழக்கமான தனித்துவமான பாணியில் இசையமைத்துள்ள இப்படத்தில் ப்ரீத்தி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஹரிப்ரியா, பக்ஸ், முத்துக்குமார், லிஸி ஆண்டனி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கியமான வேடங்களில் நடித்துள்ளனர். குடும்பங்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து கொண்டாடும் வகையில் பாசமும் பொழுதுபோக்கும் நிறைந்த கதையாக இப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படம் வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 6 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், பலத்த போட்டிக்கு இடையே விநியோக உரிமம் விற்கப்பட்டிருப்பது திரையரங்கு வியாபார வட்டாரத்தில் இப்படத்தின் மீதான வணிக எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது.
· Actor Kayal Devaraj