அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை கடந்து தளபதி விஜய்யின் பிகில் மாபெரும் சாதனை!
தளபதி விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான ‘பிகில்’ திரைப்படம் அமெரிக்க திரையரங்குகளில் 1 மில்லியன் டாலர் (சுமார் 7 கோடி ரூபாய்) வசூலை கடந்து மகத்தான சாதனை படைத்துள்ளது. இந்த தகவலை சினிமா வர்த்தக செய்தி தளமான மூவிக்ரௌ அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெளியான இப்படம், அமெரிக்காவில் பிரைம் மீடியா நிறுவனம் மூலம் மிக பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. விஜய் இரட்டை வேடத்தில் நடித்த இந்த கால்பந்து விளையாட்டு திரைப்படம் குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் திரையரங்குகளுக்கு கவர்ந்திழுத்துள்ளது. அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் வசூலை எட்டிய விஜய் படங்களின் வரிசையில் பிகில் இணைந்துள்ளது, வெளிநாட்டு பாக்ஸ் ஆபீஸில் விஜய்யின் அசைக்க முடியாத ஆதிக்கத்தை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
· Primemediaus