தளபதியின் 'பிகில்' சிங்கப்பெண்ணே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் மேஜிக்!

தளபதியின் 'பிகில்' சிங்கப்பெண்ணே பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு: ஏ.ஆர்.ரஹ்மான் மேஜிக்!

விஜய் நடிப்பில் அட்லீ இயக்கியுள்ள 'பிகில்' திரைப்படத்தின் முதல் பாடலான 'சிங்கப்பெண்ணே' வரும் ஜூலை 23 அன்று வெளியாகும் என சோனி மியூசிக் சவுத் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. பெண்களின் தன்னம்பிக்கையை போற்றும் வகையில் இப்பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ளார். விவேக் வரிகளில் உருவான இப்பாடலின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தில் விஜய் மகளிர் அணியின் பயிற்சியாளராக மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டை எதிர்நோக்கி ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் காத்திருக்கும் வேளையில், இந்த சிங்கப்பெண்ணே பாடல் ஒரு மிகப்பெரிய ஆல்பத்தின் தொடக்கமாக அமையவுள்ளது.

· Sony Music South

பழைய செய்திகள்