‘ஆகாசம் லோ ஒக தாரா’ டிரெய்லரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா: துல்கர் சல்மானுடன் கொண்டாடிய வீடியோ வைரல்!

‘ஆகாசம் லோ ஒக தாரா’ டிரெய்லரை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா: துல்கர் சல்மானுடன் கொண்டாடிய வீடியோ வைரல்!

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘ஆகாசம் லோ ஒக தாரா’ திரைப்படத்தின் டிரெய்லரை விஜய் தேவரகொண்டா வெளியிட்டு சிறப்பித்துள்ளதாக பிரபல செய்தித் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் தளத்தில் காணொளியுடன் பகிர்ந்துள்ளார். தென்னிந்திய சினிமாவின் இரு முன்னணி இளம் நட்சத்திரங்களான துல்கர் சல்மான் மற்றும் விஜய் தேவரகொண்டா இணைந்து தோன்றும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ‘மகாநடி’ திரைப்படத்தில் இணைந்து நடித்த காலத்திலிருந்தே துல்கர் மற்றும் விஜய் தேவரகொண்டா இடையே நல்ல நட்பு நிலவி வருகிறது. அந்த வகையில், துல்கரின் புதிய படமான ‘ஆகாசம் லோ ஒக தாரா’ டிரெய்லரை விஜய் தேவரகொண்டா நேரில் பார்த்து வாழ்த்துகளைத் தெரிவிக்கும் காட்சிகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஊட்டியுள்ளன. உணர்வுப்பூர்வமான காதல் மற்றும் குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் வெளியான சில மணி நேரங்களிலேயே யூடியூபில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வரவேற்பைப் பெற்றுள்ளது. பவன் சாதினேனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் நவம்பர் 20 அன்று திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. முன்னதாக சிறப்பு காட்சிகளுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், விஜய் தேவரகொண்டாவின் இந்த வாழ்த்து படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் எகிற வைத்துள்ளது.

· Ursvamsishekar

பழைய செய்திகள்