விஜய் தேவரகொண்டாவின் 'ரணபலி': இந்திய ரயில்வே வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளியீடு!

விஜய் தேவரகொண்டாவின் 'ரணபலி': இந்திய ரயில்வே வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்கள் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை வேடங்களில் நடித்துள்ள வரலாற்றுப் பின்னணி திரைப்படமான 'ரணபலி' படத்திலிருந்து 'தி ஹிஸ்டரி வீ ஃபர்காட்' என்ற சிறப்பு வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்திய ரயில்வே துறையின் தொடக்க கால வரலாற்றுப் பின்னணியில் புதைந்துள்ள அதிர்ச்சிகரமான உண்மைச் சம்பவங்களை விவரிக்கும் வகையில் இந்த வீடியோ அமைக்கப்பட்டுள்ளது. ராகுல் சாங்க்ரித்யன் இயக்கும் இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் இணைந்து மிக பிரம்மாண்டமாகத் தயாரித்துள்ளன. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லு இப்படத்தில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, அஜய்-அதுல் சகோதரர்கள் இசையமைத்துள்ளனர். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தின் அறியப்படாத வீர வரலாற்றுப் பக்கங்களை வெளிக்கொணரும் படைப்பாக இது உருவாகியுள்ளது. வரும் அக்டோபர் 16 ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்