விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபலி': மிரட்டலான டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ரணபலி': மிரட்டலான டீசர் வெளியீட்டு தேதி அறிவிப்பு

தென்னிந்திய சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட திரைப்படம் 'ரணபலி'. இயக்குநர் ராகுல் சன்கிருத்யன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த வரலாற்று பின்னணி ஆக்ஷன் திரைப்படம் உலகளவில் அக்டோபர் 16 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. தற்போது ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் அதிரடி டீசர் நாளை மாலை 4:05 மணிக்கு முறைப்படி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். நீரவ் ஷா ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் காவியத்தின் முன்னோட்டம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Idiamondbabu

பழைய செய்திகள்