விஜய் தேவரகொண்டாவின் ரணபலி அப்டேட்: மாலை 4:05 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

விஜய் தேவரகொண்டாவின் ரணபலி அப்டேட்: மாலை 4:05 மணிக்கு வெளியாகும் முக்கிய அறிவிப்பு

பான்-இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட வரலாற்று அதிரடித் திரைப்படம் 'ரணபலி'. ராகுல் சாங்க்ரித்யன் இயக்கத்தில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் 'Truth 3: தி மென் வி ஃபர்காட்' என்ற புதிய முன்னோட்டம் இன்று மாலை 4.05 மணிக்கு வெளியாவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க, அஜய் - அதுல் இசையமைத்துள்ளனர். தேசத்தின் வரலாற்றில் மறக்கப்பட்ட வீரர்களின் தியாகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த காவியப் படத்தின் அடுத்தடுத்த டீசர்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. அக்டோபர் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள ரணபலி, திரையரங்குகளில் மிகப்பெரிய அதிரடி அனுபவத்தைக் கொடுக்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்