விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா இணையும் 'ரணபலி': இன்று மாலை வெளியாகிறது பிரம்மாண்ட ட்ரெய்லர்!
விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட வரலாற்றுத் திரைப்படமான 'ரணபலி' (Ranabali) படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 6:03 மணிக்கு வெளியாகிறது. ராகுல் சாங்க்ரித்யன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நம் மண்ணின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய வீரக் கதைகளை மையமாகக் கொண்டு உருவான இக்கதைக்கு அஜய் அத்துல் இரட்டையர்கள் இசையமைத்துள்ளனர். ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேரலையாக நடைபெற்று வரும் நிலையில், வரும் அக்டோபர் 16 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரணபலி வெளியாகவுள்ளது. விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா கூட்டணியின் இந்த மெகா படம் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய ஆட்டத்தை ஆரம்பிக்கும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
· Actor Kayal Devaraj