ஐக்கிய அரபு அமீரக தணிக்கையை நிறைவு செய்தது 'மாஸ்டர்': பிஜி 13 சான்றிதழுடன் ஜனவரி 13-ல் ரிலீஸ்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'மாஸ்டர்' திரைப்படம், ஐக்கிய அரபு அமீரகத்தில் தனது தணிக்கைப் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. அமீரக தணிக்கைக் குழு இப்படத்திற்கு 'பிஜி 13' சான்றிதழ் வழங்கியுள்ளதாக அதிகாரப்பூர்வ விநியோகஸ்தரான ஏபி இன்டர்நேஷனல் தெரிவித்துள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படம் உலகமெங்கும் ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ், சாந்தனு, ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி கலைஞர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் அனல் பறக்கும் மோதலைத் திரையில் பார்க்க ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர். தணிக்கைப் பணிகள் சுமுகமாக முடிவடைந்ததை அடுத்து, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் பிற வளைகுடா நாடுகளில் அனைத்து முக்கிய நகர திரையரங்குகளிலும் பிரத்யேக காட்சிகளுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நீண்ட நாட்களுக்குப் பிறகு தியேட்டர்களுக்குப் புத்துயிர் ஊட்ட வரும் மாஸ்டர் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Apifilms