விஜய் மில்டன் இயக்கத்தில் 'தொண்டர்படை': பால் டப்பா பாடிய 'நந்தினி' பாடல் இன்று ரிலீஸ்
இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள 'தொண்டர்படை: காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் சேப்டர் 1' திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'நந்தினி' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அதிரடி பாடலை பிரபல இண்டி இசைக்கலைஞர் பால் டப்பா எழுதிப் பாடியுள்ளார். வேடன் மற்றும் பால் டப்பா ஆகிய இருவரின் வெறித்தனமான கூட்டணியில் உருவாகியுள்ள இந்த வீடியோ பாடல் இன்று மாலை 5:10 மணிக்கு இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவரத் தயாராகியுள்ளது. விஜய் மில்டனின் விறுவிறுப்பான காட்சி அமைப்பும் சாம் சி.எஸ்ஸின் துள்ளலான பின்னணி இசையும் இப்பாடலுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளதுடன் சமூக வலைதளங்களிலும் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. கோலிவுட் மற்றும் இண்டி இசை வட்டாரத்தில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ராப் இசைப் பாணியில் இப்பாடல் அமைந்துள்ளதால் பாடல் வெளியீட்டிற்காக இசைப் பிரியர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
· @tamilcinexpress