மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன்: ஆக்‌ஷன் மற்றும் காமெடியில் பத்தா!

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன்: ஆக்‌ஷன் மற்றும் காமெடியில் பத்தா!

வித்தியாசமான கதை மற்றும் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரனுடன் மீண்டும் இணைந்துள்ள 'பத்தா' திரைப்படம் ஆக்‌ஷன், நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகளுடன் தயாராகியுள்ளதாக தமிழ் சினிமா எக்ஸ்பிரஸ் சிறப்புச் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இக்கூட்டணியில் உருவான நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் மற்றும் சீதக்காதி ஆகிய திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் தனித்துவமான கவனத்தையும் சினிமா ரசிகர்களின் பேராதரவையும் பெற்றன. தற்போது இவர்கள் மீண்டும் கைகோர்த்துள்ள பத்தா படத்தில், விஜய் சேதுபதி தனது இயல்பான எதார்த்த நடிப்பால் ரசிகர்களை மீண்டும் வியப்பில் ஆழ்த்தவுள்ளார். படத்தின் இறுதிக்கட்டப் பின்னணி வேலைகள் மற்றும் டப்பிங் பணிகள் முடிவடையும் நிலையை எட்டியுள்ளதால், படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டுத் தேதிகள் மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. ரசிகர்கள் இக்கூட்டணியின் வரவை திரையரங்குகளில் கொண்டாட ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

· @tamilcinexpress

பழைய செய்திகள்