கேங்ஸ்டர் முதல் எமோஷனல் மனிதன் வரை: 'பத்தா' படத்தில் விஜய் சேதுபதி அபார நடிப்பு!

கேங்ஸ்டர் முதல் எமோஷனல் மனிதன் வரை: 'பத்தா' படத்தில் விஜய் சேதுபதி அபார நடிப்பு!

விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பத்தா' திரைப்படத்தில் அவரது எதார்த்தமான நடிப்பு ரசிகர்களையும் விமர்சகர்களையும் வெகுவாகக் கவர்ந்துள்ளது. கம்பீரமான கேங்ஸ்டர் தோற்றத்திலிருந்து மென்மையான உணர்ச்சிவசப்படும் மனிதனாக மாறும் ஒவ்வொரு காட்சியிலும் விஜய் சேதுபதி காட்டியுள்ள இயல்பான நடிப்பு பாராட்டைப் பெற்று வருகிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் வேகத்தையும், குடும்ப பாசக் காட்சிகளில் அமைதியான முதிர்ச்சியையும் மிக இயல்பாகக் கையாண்டுள்ளார் விஜய் சேதுபதி. நிழல் உலக தாதாவின் கடினமான முகத்திற்குப் பின்னால் இருக்கும் தனிமையையும் இயலாமையையும் அவர் கண்களாலேயே வெளிப்படுத்திய விதம் திரையரங்கில் பலத்த கைதட்டல்களைப் பெறுகிறது. ஒன்லி கோலிவுட் வெளியிட்டுள்ள பதிவில், கதாபாத்திரத்தின் ஆழத்தை உணர்ந்து அவர் வெளிப்படுத்தியிருக்கும் நடிப்பு படத்திற்குப் பெரும் பலம் சேர்த்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களின் பேராதரவோடு திரையரங்குகளில் ரசிகர்களின் பெரும் கூட்டத்துடன் பத்தா திரைப்படம் தனது வெற்றிகரமான பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. விஜய் சேதுபதியின் திரைப்பயணத்தில் மற்றொரு சிறந்த நடிப்புப் பதிவாக இந்தப் படம் அமைந்துள்ளது.

· Only Kollywood

பழைய செய்திகள்