யு/ஏ 13+ தணிக்கை சான்றிதழுடன் அக்டோபர் 1 அன்று வெளியாகும் பத்தா

யு/ஏ 13+ தணிக்கை சான்றிதழுடன் அக்டோபர் 1 அன்று வெளியாகும் பத்தா

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பத்தா' திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 'யு/ஏ 13+' சான்றிதழைப் பெற்றுள்ளது. இத்தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதோடு, படம் திரையரங்குகளில் ரசிகர்களை மகிழ்விக்க முழுமையாக தயாராகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' மற்றும் 'சீதக்காதி' போன்ற பாராட்டப்பட்ட படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மற்றும் பாலாஜி தரணிதரன் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது தமிழ் சினிமா ரசிகர்களிடையே உச்சக்கட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கரின் பாடல்களும் பின்னணி இசையும் ஏற்கனவே இணையத்தில் நல்ல வரவேற்பைப் பெற்று படத்தின் மீதான மதிப்பை கூட்டியுள்ளன. லிஜோமோல் ஜோஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இப்படம் வரும் அக்டோபர் 1 அன்று திரையரங்குகளில் உலகம் முழுவதும் வெளியாகிறது. மனித உணர்வுகளையும் எதார்த்தமான நகைச்சுவையையும் பேசும் தனித்துவமான திரை அனுபவமாக பத்தா அமையும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்