இரண்டாவது வாரத்தில் கூடுதல் திரையரங்குகளுடன் 'பத்தா': மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படம் அபார வெற்றி!

இரண்டாவது வாரத்தில் கூடுதல் திரையரங்குகளுடன் 'பத்தா': மக்கள் செல்வன் விஜய் சேதுபதி படம் அபார வெற்றி!

விஜய் சேதுபதி மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான 'பத்தா' திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையரங்குகள் மற்றும் காட்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. எளிய மனிதர்களின் எதார்த்த வாழ்க்கையையும் அழுத்தமான உணர்வுகளையும் பதிவு செய்துள்ள இப்படம், வெளியான நாள் முதலே அனைத்து தரப்பு விமர்சகர்களாலும் வெகுவாக பாராட்டப்பட்டு வருகிறது. விஜய் சேதுபதியின் அசாத்திய நடிப்பும், லிஜோமோல் ஜோஸின் யதார்த்தமான கதாபாத்திரமும் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. மக்களின் ஏகோபித்த ஆதரவால் பாக்ஸ் ஆபிஸில் வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாசிட்டிவ் விமர்சனங்களின் பலத்தால் திரையரங்குகளுக்கு வரும் குடும்ப ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருவதால், 'பத்தா' இந்த ஆண்டின் முக்கிய வெற்றிப் படங்களின் பட்டியலில் இணைந்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்