மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘பத்தா’: மாஸ்டர் சாய் நடிப்புக்கு தேசிய விருது உறுதி என குவியும் பாராட்டு!
பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாஸ்டர் சாய், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள ‘பத்தா’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மற்றும் சினிமா விமர்சகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைதளங்களில் படத்திற்கு 4/5 மதிப்பீடு வழங்கி பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா அட்லீ வழங்கியுள்ள இப்படத்தில், பாறையை ஒரு சிறிய உளி செதுக்குவது போல விஜய் சேதுபதியின் மனதை பக்குவப்படுத்தும் மாஸ்டர் சாயின் நடிப்பு பார்வையாளர்களின் இதயங்களைத் தொட்டுள்ளது. அவரது அபாரமான நடிப்பிற்கு தேசிய விருது கிடைக்கும் அளவிற்கு வலுவான தாக்கம் இருப்பதாக விமர்சனங்கள் கூறுகின்றன. விஜய் சேதுபதி தனது வழக்கமான எதார்த்தமான நடிப்பிலும், லிஜோமோல் ஜோஸ் இயல்பான தோற்றத்திலும் திரையில் அசத்தியுள்ளனர். சாய் அபியங்கர் இசையமைத்துள்ள பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளன. தரமான கதையம்சத்துடன் உருவான ‘பத்தா’ திரைப்படம் குடும்ப ரசிகர்களை திரையரங்குகளுக்கு ஈர்த்து வருகிறது.
· Actor Kayal Devaraj