சித் ஸ்ரீராம் குரலில் வெளியான விஜய் சேதுபதியின் 'பத்தா' பட மெலடி பாடல் 'மொழியே'

சித் ஸ்ரீராம் குரலில் வெளியான விஜய் சேதுபதியின் 'பத்தா' பட மெலடி பாடல் 'மொழியே'

விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 'பத்தா' திரைப்படத்தின் மூன்றாவது பாடலான 'மொழியே' பாடல் தற்போது வெளியாகியுள்ளது. சாய் அபியங்கர் இசையில், சித் ஸ்ரீராம் பாடியுள்ள இந்த இனிமையான மெலடி பாடல் இணையத்தில் ரசிகர்களை மெய்மறக்கச் செய்து வருவதாக சினிமா விமர்சகர் கயல் தேவராஜ் பதிவிட்டுள்ளார். பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். பாடலாசிரியர் கார்த்திக் நேத்தாவின் வரிகளில் சித் ஸ்ரீராமின் வசீகரக் குரல் இப்பாடலுக்கு கூடுதல் உணர்வைச் சேர்த்துள்ளது. திங்க் மியூசிக் யூடியூப் தளத்தில் வெளியான இப்பாடல் இசைப் பிரியர்களின் பிளேலிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது. இத்திரைப்படம் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' கூட்டணிக்காகக் காத்திருந்த ரசிகர்களுக்கு இப்படத்தின் பாடல்கள் விருந்தாக அமைந்துள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்