புக் மை ஷோவில் 9.1 ரேட்டிங் பெற்று அசத்தும் பத்தா: விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு குவியும் பாராட்டு

புக் மை ஷோவில் 9.1 ரேட்டிங் பெற்று அசத்தும் பத்தா: விஜய் சேதுபதியின் நடிப்பிற்கு குவியும் பாராட்டு

'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்', 'சீதக்காதி' போன்ற தரமான படங்களைத் தந்த இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'பத்தா' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பைப் பெற்று வருகிறது. பார்வையாளர்களின் பெரும் ஆதரவோடு புக் மை ஷோ தளத்தில் 9.1 ஸ்டார் ரேட்டிங்கை பெற்று இப்படம் சாதனை படைத்துள்ளது. விஜய் சேதுபதியுடன் லிஜோமோல் ஜோஸ் மற்றும் பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். மனித மனங்களின் நுட்பமான உணர்வுகளையும், எதார்த்தமான மனிதர்களையும் பாலாஜி தரணிதரன் வழக்கம் போல தனது அலாதியான பாணியில் காட்சிப்படுத்தியுள்ள விதம் படம் பார்த்த அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. வார இறுதி நாட்களில் குடும்பத்துடன் திரையரங்குகளுக்குச் சென்று ரசிக்கக்கூடிய ஒரு தரமான படைப்பாக 'பத்தா' உருவெடுத்துள்ளதால், திரையரங்குகளில் கூடுதல் காட்சிகளை ஒதுக்க உரிமையாளர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்