சோஷியல் மீடியாவில் வாதாட விரும்ப மாட்டேன்: 'பத்தா' மேடையில் மனம் திறந்த விஜய் சேதுபதி!
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'பத்தா' படத்தின் வெற்றி விழாவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்துகொண்டு சினிமா, சமூகம் மற்றும் சமூக வலைத்தள விவாதங்கள் குறித்து தனது முதிர்ச்சியான கருத்துகளைப் பதிவு செய்தார். இதனை நடிகர் கயல் தேவராஜ் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். மேடையில் பேசிய விஜய் சேதுபதி, "ஒரு படத்தை ரசிகர்களிடம் ஒப்படைத்த பிறகு அவர்கள் அதை ரசிக்க வேண்டும் என்பது மட்டுமே என் விருப்பம். சமூக வலைத்தளங்களில் வரும் ஒவ்வொரு கருத்துக்கும் விளக்கம் கொடுத்து சண்டை போட எனக்கு விருப்பமில்லை. பாலாஜி மீது எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. அவர் பல ஆண்டுகளாகப் பட்ட கஷ்டங்களுக்கு இந்த பத்தா படம் நல்ல வெற்றியையும் பொருளாதார பலத்தையும் கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். பாலாஜி அடுத்ததாக இன்னும் பெரிய படத்தை இயக்கி நல்லா சம்பாதிக்க வேண்டும்" என்று நெகிழ்ச்சியோடு வாழ்த்தினார். மேலும் அட்லீ இந்த படத்தை திரையரங்குகளுக்கும் விருதுகளுக்கும் கொண்டு செல்வேன் என்று தன்னிடம் கூறியதை நினைவு கூர்ந்த விஜய் சேதுபதி, குழந்தை நட்சத்திரம் சாய் எதிர்காலத்தில் ஒரு லெஜண்டாக வருவான் என்றும், பத்தா போன்ற நல்ல திரைப்படங்களின் வெற்றி பல புதிய படைப்பாளிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றும் தெரிவித்தார்.
· Actor Kayal Devaraj