தளபதி 64 படத்தில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தளபதி 64 படத்தில் இணைந்தார் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் 64வது திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருப்பதாக தயாரிப்பு நிறுவனமான எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த மாபெரும் அறிவிப்பு இணையத்தில் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. கைதி திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யுடன் இணையும் இந்த படத்தில், விஜய் சேதுபதியும் ஒரு முக்கிய அங்கமாக இணைந்திருப்பது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. விஜய் கதாநாயகனாகவும், அவருக்கு எதிரணியாக விஜய் சேதுபதியும் களமிறங்கும் இந்த மோதல் தமிழ் சினிமாவில் இதுவரை பார்த்திராத புதிய அனுபவத்தைக் கொடுக்கும் என நம்பப்படுகிறது. அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. மேலும் படத்தில் இணையவுள்ள மற்ற முன்னணி நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

· Vijaysethuoffl

பழைய செய்திகள்