திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த மகாராஜா: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி நன்றி

திரையரங்குகளில் 100 நாட்களைக் கடந்த மகாராஜா: ரசிகர்களுக்கு விஜய் சேதுபதி நன்றி

குரங்கு பொம்மை பட புகழ் நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமாக வெளியான மகாராஜா திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக 100 நாட்களை நிறைவு செய்துள்ளது. இந்த இமாலய வெற்றியை முன்னிட்டு ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் தனது மனமார்ந்த நன்றியை விஜய் சேதுபதி எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். புதிரான திரைக்கதை, எதிர்பார்க்காத திருப்பங்கள் மற்றும் விஜய் சேதுபதியின் அசாத்திய நடிப்பால் உருவான இந்த படம் தமிழ்நாட்டிலும் உலக நாடுகளிலும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரின் சிறந்த நடிப்பும் இப்படத்தின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. சமீபத்தில் சர்வதேச அளவில் சீன திரையரங்குகளிலும் கூட இப்படம் வெளியாகி பாராட்டைப் பெற்றது. சமீப காலங்களில் திரைப்படங்கள் திரையரங்குகளில் சில வாரங்கள் மட்டுமே ஓடும் நிலையில், மகாராஜாவின் இந்த 100 நாட்கள் திரையரங்க சாதனை தமிழ் சினிமாவுக்குப் பெருமை சேர்த்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் நிதிலன் மற்றும் விஜய் சேதுபதியின் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

· Vijaysethuoffl

பழைய செய்திகள்