ஹாலிவுட்டுக்கு செல்லும் ‘மகாராஜா’: குமுதா ஹாப்பி அண்ணாச்சி என உற்சாகமாகப் பேசிய விஜய் சேதுபதி!
விஜய் சேதுபதியின் 50வது திரைப்படமான ‘மகாராஜா’ ஹாலிவுட் வரை சென்று சர்வதேச அளவில் மிகப்பெரிய அங்கீகாரத்தைப் பெற்று வருவது குறித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தனது மனமார்ந்த மகிழ்ச்சியை உற்சாகமாகப் பகிர்ந்துள்ளார். இதற்கு முன்பு ஹாலிவுட் படங்களில் நடிக்க பல நிறுவனங்களுடன் பேசியதாகவும், பல வாய்ப்புகளைத் தேடி முயற்சித்ததாகவும் விஜய் சேதுபதி கூறினார். எதுவும் அமையாத சூழலில், தற்போது நமது தமிழ் மண்ணின் கதை உலக அரங்கிற்குச் சென்று அங்குள்ள முன்னணி நட்சத்திரங்கள் வியந்து பாராட்டும் நிலையை எட்டியிருப்பது மிகுந்த பெருமை அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார். அங்குள்ள சிறந்த நடிகர்கள் நமது படைப்பைப் பார்த்து பாராட்டும் போது மனதில் இயல்பாகவே ‘குமுதா ஹாப்பி அண்ணாச்சி!’ என்ற உற்சாகம் பொங்குவதாக அவர் சிரித்தபடி கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகளவில் ரசித்து பகிரப்பட்டு வருகிறது.
· @_movietamil