சூப்பர் டீலக்ஸ் படத்திற்காக தேசிய விருது வென்ற விஜய் சேதுபதி: குவியும் பாராட்டு
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தில் நடித்ததற்காக மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பிஆர்ஓ சதீஷ் நெகிழ்ச்சியுடன் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இப்படத்தில் 'ஷில்பா' என்ற திருநங்கை கதாபாத்திரத்தில் தோன்றி, உணர்வுபூர்வமான நடிப்பால் ரசிகர்களையும் உலகளாவிய சினிமா விமர்சகர்களையும் மெய்சிலிர்க்க வைத்தார் விஜய் சேதுபதி. ஒரு முன்னணி நட்சத்திர கதாநாயகனாக தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே, எந்தத் தயக்கமும் இன்றி இத்தகைய சவாலான கதாபாத்திரத்தைத் துணிச்சலோடு ஏற்று நடித்தது இந்திய திரையுலகினரையே வியக்க வைத்தது. வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கைக் கதைகள் ஒன்றிணையும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி வெளிப்படுத்திய அந்த உன்னதமான நடிப்புக்கு இந்த தேசிய கௌரவம் முற்றிலும் தகுதியானது என்று பாராட்டி, கோலிவுட் மற்றும் இந்தியத் திரையுலகினர் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.
· Prosathish