விஜய் சேதுபதியின் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’: முதல் பாடல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்!

விஜய் சேதுபதியின் ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’: முதல் பாடல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் பூரி ஜெகன்நாத் இயக்கும் பிரம்மாண்ட திரைப்படமான ‘ஸ்லம்டாக் 33 டெம்பிள் ரோடு’ படத்தின் முதல் பாடல் அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று படக்குழுவினர் எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளனர். பூரி கனெக்ட்ஸ் சார்பில் சார்மி கவுர் மற்றும் பூரி ஜெகன்நாத் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். விஜய் சேதுபதியுடன் பாலிவுட் நட்சத்திர நடிகை தபு, சம்யுக்தா, ஜரினா வஹாப், விடிவி கணேஷ் உள்ளிட்ட பல மொழிகளைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக இது உருவாகி வருகிறது. பூரி ஜெகன்நாத்தின் அதிரடி திரைக்கதையும் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பும் இணையும் போது தியேட்டர்களில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது உறுதி. தசரா பண்டிகையை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த புதிய போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ தேதியை தயாரிப்பாளர்கள் எந்த நேரத்திலும் அறிவிக்கக்கூடும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்