விஜய் சேதுபதியின் 'ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு' படப்பிடிப்பு நிறைவு: பூரி ஜெகன்நாத் இயக்கம்
'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி மற்றும் பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகி வரும் அதிரடி திரைப்படமான 'ஸ்லம்டாக்: 33 டெம்பிள் ரோடு' படத்தின் மொத்த படப்பிடிப்பும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்களுடன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தபு, ஜரினா வஹாப், சம்யுக்தா, விடிவி கணேஷ் உள்ளிட்ட பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். உணர்ச்சிகரமான அதிரடி த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதியின் அதிரடியான புதிய கதாபாத்திரம் சினிமா ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக இப்படம் வெளியாகவுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
· Actor Kayal Devaraj