யோகி பாபு மற்றும் சத்யா இணையும் நகைச்சுவை படத்தின் க்ளிம்ப்ஸை வெளியிடும் விஜய் சேதுபதி

யோகி பாபு மற்றும் சத்யா இணையும் நகைச்சுவை படத்தின் க்ளிம்ப்ஸை வெளியிடும் விஜய் சேதுபதி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நட்சத்திரம் யோகி பாபுவும், தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் சத்யாவும் இணைந்து நடிக்கும் புதிய இருமொழி நகைச்சுவை திரைப்படத்தின் தலைப்பு க்ளிம்ப்ஸ் பற்றிய அறிவிப்பு வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த எதிர்பார்ப்புக்குரிய வீடியோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி செப்டம்பர் 30 காலை 11 மணிக்கு வெளியிடுகிறார். பவன் பாசம்செட்டி இயக்கும் இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களை ஒரே நேரத்தில் கவரும் முழுநீள பொழுதுபோக்கு படமாக உருவாகி வருகிறது. தென்னிந்தியாவின் இரு சிறந்த நகைச்சுவை நடிகர்கள் ஒரே திரையில் இணைவதால் திரையரங்குகளில் சிரிப்பு வெடிக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் சேதுபதியின் கைகளால் வெளியாகும் இந்த பிரத்யேக தலைப்பு முன்னோட்டம் இணையத்தில் பெரிய அளவில் வைரலாகும் என்பதில் ஐயமில்லை. நகைச்சுவை பிரியர்கள் ஆவலுடன் காத்திருக்கும் இந்த கூட்டணியின் அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியாகவுள்ளன.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்