சரியாக 96 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திரைக்கு வரும் '96': ராம், ஜானுவை வரவேற்க காத்திருக்கும் ரசிகர்கள்!
தமிழ் சினிமா வரலாற்றில் எக்காலத்துக்கும் மறக்க முடியாத காதல் காவியங்களில் ஒன்றாக நிலைத்துவிட்ட படம் '96'. விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா ஜோடியாக நடிக்க, சி. பிரேம் குமார் இயக்கிய இப்படம் வெளியாகி சரியாக 96 மாதங்கள் நிறைவடைவதை கொண்டாடும் வகையில், மீண்டும் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளது. 2018 அக்டோபரில் வெளியான '96' திரைப்படம், பள்ளிப் பருவ நினைவுகளையும் நிறைவேறாத காதலையும் ராம், ஜானு கதாபாத்திரங்கள் மூலம் ரசிகர்களின் இதயங்களில் ஆழமாக பதிய வைத்தது. கோவிந்த் வசந்தாவின் ஆன்மாவைத் தொடும் பின்னணி இசையும் பாடல்களும் இன்றும் இளைஞர்களின் விருப்பமான பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் வெள்ளித்திரையில் இக்காதல் காவியத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், 90ஸ் கிட்ஸ் மற்றும் சினிமா காதலர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரீ-ரிலீஸ் தேதி மற்றும் திரையரங்கு விவரங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளன.
· @xpresscinema