விஜய் பாடிய 'வெறித்தனம்' பாடல் செப்டம்பர் 1-ல் ரிலீஸ்: பிகில் படக்குழு அதிரடி அறிவிப்பு!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பிகில்' படத்தின் இரண்டாவது சிங்கிளான 'வெறித்தனம்' பாடல் செப்டம்பர் 1 அன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சோனி மியூசிக் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தளபதி விஜய் தனது சொந்தக் குரலில் இப்பாடலைப் பாடியிருப்பது இதன் தனிச்சிறப்பாகும். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விவேக் எழுதியுள்ள இந்த துள்ளலான குத்துப்பாடல், தாளம் போட வைக்கும் வகையில் அமைந்திருப்பதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக வெளியான சிங்கப்பெண்ணே பாடலின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, விஜய் குரலில் உருவாகியுள்ள இந்த பாடல் மீது இணையத்தில் பேரார்வம் உருவாகியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸாக இருக்கும் பிகில் படத்தின் கொண்டாட்டத்திற்கு பிள்ளையார் சுழி போடும் விதமாக இந்த பாடல் அமையவிருக்கிறது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
· Sony Music South