தளபதி பிறந்தநாள் கொண்டாட்டம்: திரையரங்குகளில் மீண்டும் ரீ-ரிலீஸாகும் துப்பாக்கி!
தளபதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு, தமிழ் சினிமாவின் பிளாக்பஸ்டர் வெற்றிப் படமான துப்பாக்கி மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. பிரபல விநியோக நிறுவனமான ஸ்ரீ கற்பக விநாயகா பிலிம் சர்க்யூட்ஸ் இந்த உற்சாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரும் ஜூன் 21 அன்று முன்னணி திரையரங்குகளில் துப்பாக்கி ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் மற்றும் வித்யுத் ஜம்வால் நடிப்பில் உருவான துப்பாக்கி திரைப்படம், ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்படும் ஒரு முழுமையான ஆக்ஷன் த்ரில்லர். ஹாரிஸ் ஜெயராஜின் அதிரடி பாடல்களும் பின்னணி இசையும் தியேட்டர்களில் ரசிகர்களை மீண்டும் குத்தாட்டம் போட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. சென்னையில் உள்ள கமலா, காசி, ஜி.கே மற்றும் ஏ.ஜி.எஸ் உள்ளிட்ட முக்கிய திரையரங்குகளில் சிறப்பு காட்சிகள் திரையிடப்பட உள்ளன. பிறந்தநாள் மாதத்தில் தளபதியின் மாஸ் காட்சிகளை மீண்டும் வெள்ளித்திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் முன்பதிவு செய்து வருகின்றனர்.
· Skvfcs