ஆந்திரா தெலுங்கானாவில் விக்ரம் வேட்டை: மூன்றே நாட்களில் 10 கோடி ரூபாய் வசூல் சாதனை!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் திரைப்படம், தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் முதல் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து அசத்தியுள்ளது. தெலுங்கு விநியோகஸ்தரான ஸ்ரேஷ்ட் மூவீஸ் இந்த அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை வெளியிட்டுள்ளது. தெலுங்கில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் வெளியான இப்படம், முதல் நாள் முதலே ஆந்திரா ரசிகர்களிடையே அதீத வரவேற்பைப் பெற்றது. கமல் ஹாசனின் அதிரடி நடிப்பு, ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதியின் அசுரத்தனமான மோதல் காட்சிகள் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளன. ஞாயிற்றுக்கிழமை வசூல் உச்சத்தை எட்டிய நிலையில், திங்கட்கிழமையும் தியேட்டர்களில் கூட்ட நெரிசல் தொடர்வதாக விநியோக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் தெலுங்கு திரையுலகில் கமல் ஹாசனுக்கு மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றி மீண்டும் கிடைத்துள்ளது.
· Sreshthmovies