சுந்தர் சி, விஷால் கூட்டணியின் புருஷன்: படப்பிடிப்பு நிறைவு, உள்ளத்தை அள்ளித்தா பாணியில் கலக்கலான பாடல்கள்!

சுந்தர் சி, விஷால் கூட்டணியின் புருஷன்: படப்பிடிப்பு நிறைவு, உள்ளத்தை அள்ளித்தா பாணியில் கலக்கலான பாடல்கள்!

சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புதிய திரைப்படமான புருஷன் படத்தின் இறுதி கட்டப் படப்பிடிப்பு இன்று சென்னை கல்பனா ஹவுஸில் நிறைவடைகிறது. படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட பாடல் காட்சிகளைப் பார்த்தவர்கள் படம் பற்றிய அதிரடியான தகவல்களைப் பகிர்ந்துள்ளதாக மூவி தமிழ் தளம் எக்ஸ் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று நடைபெற்ற படப்பிடிப்பில் விஷால் மற்றும் யோகி பாபு சம்பந்தப்பட்ட நகைச்சுவைக் காட்சிகள் படமாக்கப்பட்டன. இதற்கிடையில், இயக்குனர் சுந்தர் சி படத்திலிருந்து இரண்டு பாடல்களை தனது மொபைலில் சிலருக்கு காண்பித்துள்ளார். அதில் விஷால் மற்றும் தமன்னா தோன்றும் பாடல் காட்சி பிரமாதமாக வந்துள்ளதாகவும், இது மற்றொரு உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை போல மாபெரும் வரவேற்பைப் பெறும் என்றும் பார்த்தவர்கள் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் குடும்பப் பாங்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகும் புருஷன் திரைப்படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. படத்தின் வர்த்தகம் 90 கோடி ரூபாயைத் தாண்டும் என தயாரிப்பு வட்டாரங்கள் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றன.

· @_movietamil

பழைய செய்திகள்