விஷ்வாக் சென்னின் கல்ட் படத்திற்கு ஏ சான்றிதழ்: அக்டோபர் 30-ல் ரத்தக் களரி ஆக்ஷன் ரிலீஸ்!
விஷ்வாக் சென் எழுதி இயக்கி நடித்துள்ள கல்ட் திரைப்படத்தை தணிக்கை செய்த சென்சார் போர்டு, படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. டிஎஸ்பி சங்கல்ப் நாயக் என்ற அதிரடி காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் விஷ்வாக் சென் நடித்துள்ள இத்திரைப்படம் அக்டோபர் 30 அன்று வெளியாகிறது. தெலுங்கு சினிமாவில் வழக்கத்திற்கு மாறான ஒரு தீவிரமான ஸ்லாஷர் ஆக்ஷன் திரில்லராக இப்படம் உருவாகியுள்ளது. படத்தின் வன்முறைக் காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான ஆக்ஷன் தருணங்கள் காரணமாகத் தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள கல்ட் திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகிறது.
· Ursvamsishekar