கலகலப்பான அலப்பறையுடன் துவங்கிய வி.ஜே. சித்துவின் 'தயங்காரம்' பட டப்பிங் பணிகள்!
யூடியூப் மூலம் பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் இயக்குநராகவும் கதாநாயகனாகவும் களமிறங்கும் வி.ஜே. சித்து மற்றும் அவரது குழுவினர் நடிக்கும் 'தயங்காரம்' திரைப்படத்தின் டப்பிங் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளன. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டப்பிங் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், வி.ஜே. சித்துவுடன் இணைந்து நட்டி நடராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பு பணிகளைக் கவனித்துள்ளார். யூடியூபில் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த சித்து குழுவினர், இப்படத்தின் மூலம் திரையரங்குகளில் கலகலப்பான நகைச்சுவை விருந்தை அளிக்கத் தயாராகி வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் டீசர் மற்றும் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
· Prosathish