படப்பிடிப்பை நிறைவு செய்தது விஜய் சித்துவின் தயங்காரம்: டிசம்பரில் திரைக்கு வர முழுவீச்சில் ஏற்பாடு!
யூடியூப் மூலம் பிரபலமடைந்து திரைப்பட நடிகராக உருவெடுத்துள்ள விஜய் சித்துவின் நடிப்பில் உருவாகி வரும் தயங்காரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன. இதனைத் தொடர்ந்து தற்போது இறுதிக்கட்ட தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இணையதளங்களில் தனது கலகலப்பான நகைச்சுவை பாணியால் பெருமளவிலான ரசிகர்களைக் கவர்ந்தவர் விஜய் சித்து. முழுநீள பொழுதுபோக்கு மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் தயாராகும் இந்த தயங்காரம் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில், மொத்த படப்பிடிப்பும் இனிதே முடிவடைந்துள்ளதாக படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் டப்பிங், எடிட்டிங் மற்றும் பின்னணி இசைப் பணிகளை விரைந்து முடித்து, வரும் டிசம்பர் மாதம் படத்தை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் மற்றும் பாடல்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
· @_movietamil