பொங்கல் ரேஸில் இணைந்த விஜே சித்துவின் தயங்காரம்: ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பொங்கல் ரேஸில் இணைந்த விஜே சித்துவின் தயங்காரம்: ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பிரபல யூடியூபரும் நடிகருமான விஜே சித்து இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'தயங்காரம்'. வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்தில் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி நடராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ரசிகர்களுக்குப் பொங்கல் விருந்தாக இந்த படம் அமையும் என குறிப்பிட்டு தயாரிப்பு நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு சித்து இசையமைக்க, பிரதீப் ஈ. ராகவ் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். யூடியூபில் நகைச்சுவை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த விஜே சித்து, முதல்முறையாக வெள்ளித்திரையில் முழுநீள படத்தை இயக்கியுள்ளதால் கோலிவுட் வட்டாரத்தில் கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வரிசைகட்டி நிற்கும் வேளையில், இளசுகளைக் கவரும் வண்ணம் தயங்காரம் திரைப்படமும் பொங்கல் களத்தில் இறங்கியுள்ளது திரையுலகில் கலகலப்பான பேசுபொருளாக மாறியுள்ளது.

· Actor Kayal Devaraj

பழைய செய்திகள்