திரையரங்குகளில் பிரம்மாண்ட சாகச அனுபவம்: 'விருஷகர்மா' ரிலீசுக்கு இன்னும் 50 நாட்களே பாக்கி!
புதிய அட்வென்ச்சர் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'விருஷகர்மா' திரைப்படம் திரைக்கு வர இன்னும் 50 நாட்களே இருப்பதாக சினிமா தகவல் தொடர்பாளர் வம்சி சேகர் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார். இதனுடன் வெளியாகியுள்ள சிறப்பு போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. புராதன தொன்மங்கள் மற்றும் மர்மங்கள் நிறைந்த சாகசக் களத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், திரையரங்குகளில் ரசிகர்களுக்கு ஒரு புதுமையான காட்சி விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக ரசிகர்கள் இதுபோன்ற புதுமையான கதைக்களங்களை ஆர்வத்துடன் வரவேற்று வரும் நிலையில், படத்தின் தயாரிப்புப் பணிகள் விறுவிறுப்பாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. வரும் டிசம்பர் 4 அன்று 'விருஷகர்மா' திரைப்படம் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. அடுத்தடுத்த வாரங்களில் படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் உள்ளிட்ட அதிரடி அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
· Ursvamsishekar