சென்னையில் மழை, ஹைதராபாத்தில் பிரம்மாண்ட செட்: 'டேர்டெவில்' படப்பிடிப்பு ரகசியங்களை பகிர்ந்த ஆதிக்!
'டேர்டெவில்' திரைப்படத்தின் படப்பிடிப்பை முதலில் சென்னையில் தொடங்கவே அஜித் குமார் விரும்பியதாகவும், எதிர்பாராத மழைக் காரணங்களால் திட்டம் மாற்றப்பட்டதாகவும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த சுவாரசியமான பின்னணித் தகவல் இணையத்தில் ரசிகர்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. சென்னையில் மிகப்பெரிய அரங்கம் அமைக்க திட்டமிட்டிருந்த நிலையில், பருவமழை குறுக்கிட்டதால் அந்த பிரம்மாண்ட செட் உடனடியாக ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டது. தீபாவளி பண்டிகைக்குப் பிறகு, நவம்பர் 12 ஆம் தேதி இரவு 8:05 மணிக்கு கேமரா ஆன் செய்யப்பட்டு படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக துவங்குகிறது. அதன் பிறகு எந்தவித இடைவெளியுமின்றி தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும் ஆதிக் குறிப்பிட்டுள்ளார். திட்டமிட்டபடி முழு வீச்சில் பணியை முடிக்க படக்குழு முனைப்பு காட்டி வருகிறது.
· @_movietamil