ரஜினிகாந்த் படத்திற்காக தள்ளிப்போன தனுஷின் ஓம்: இயக்குநர் பகிர்ந்த நெகிழ்ச்சி காரணம்
தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் அக்டோபர் மாதத்திலிருந்து நவம்பர் மாதத்திற்கு மாற்றப்பட்டதற்கான உண்மையான காரணத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி விளக்கியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பட வெளியீட்டிற்கு மரியாதை செலுத்தும் வகையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதமே தனுஷ் தன்னிடம் பேசி, ரஜினி சாரின் படம் வெளியாகும் சமயத்தில் நமது படத்தை வெளியிடுவது சரியாக இருக்காது என்று கூறியதாக இயக்குநர் தெரிவித்துள்ளார். ஓடிடி தளத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட தேதியை மாற்ற வேண்டிய சூழல் இருந்தபோதும், தனுஷ் இந்த முடிவில் மிகவும் உறுதியாக இருந்து பேச்சுவார்த்தை நடத்தி ரிலீஸை நவம்பருக்கு மாற்றியுள்ளார். அடுத்தடுத்து பல படங்கள் வெளியாகும் போது ஒவ்வொன்றுக்கும் திரையரங்குகளில் போதிய இடமிருக்க வேண்டும் என்பதே தயாரிப்புக் குழுவின் நோக்கம். ரஜினி மீதான அன்பினாலும் பெருந்தன்மையினாலும் எடுக்கப்பட்ட இந்த முடிவை சினிமா வட்டாரத்தினரும் ரசிகர்களும் பாராட்டி வருகின்றனர்.
· @_movietamil